தமிழ் / Tamil

பெற்றோர்கள் என்ற வகையிலும் இளையோருக்கான முன்மாதிரியானோர் என்ற வகையிலும் எமது பிள்ளைகளுக்கு நல்லதையே நாம் விரும்புகிறோம். நமது பிள்ளைகளுக்கு சிறந்த முன்மாதிரியாக இருக்க நாம் மிகவும் முயற்சிக்கின்றோம். ஆனால் சிலபோது, நாம் அறியாமலேயே சில வார்த்தைகளைப் பிரயோகிப்போம், அவை அவமரியாதையான நடத்தைகளுக்குக் காரணமாயமைந்துவிடும்.

பெண்களுக்கெதிரான வன்முறைச் சுழற்சி அவமரியாதையிலிருந்தே ஆரம்பமாகின்றது. “ஆண் பிள்ளைகளென்றால் அப்படித்தான் இருப்பார்கள்” அல்லது “அவனுக்கு உன்னைப் பிடிக்கும் அதனால்தான் அவன் அப்படி செய்தான்”, போன்ற நியாயங்களை நீங்கள் கூறும்போது, சில சந்தர்ப்பங்களிலும் சில காரணங்களுக்காகவும் அவமரியாதையான நடத்தைகள் ஆகுமானதே என இளையவர்கள் நம்ப ஆரம்பிக்கின்றனர்.

பெண்களுக்கெதிரான அவமரியாதை நடத்தைகளை நியாயப்படுத்தக்கூடிய ஒன்றை ஒருவர் சொல்லும்போது அல்லது செய்யும்போது நாம் அதற்கெதிராகக் குரல்கொடுக்க வேண்டும்.

அத்தகைய மனப்பாங்குகளுக்கும் நடத்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலமும் எமது பிள்ளைகளிடம் மரியாதையைப் பற்றி பேசுவதன் மூலமும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் ஆரம்பிக்கும் முன்பே அதனை நிறுத்த நம்மால் உதவ முடியும்.

இது பற்றி மேலும் அறிய கீழுள்ள பிரச்சார பிரசுரங்களைப் பார்க்கவும்.

Conversation guide

Arabic conversation guide

Brochure

Brochure - Arabic

Infographic

Infographic-cover

Poster

poster-cover

poster-cover

Animation